ரிஷாட் பதியுதீன் கைது (காணொளி)

Monday, 19 October 2020 - 6:09

%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81+%28%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF%29
நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாட் பதியூதீன் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் இன்று அதிகாலை தெஹிவளை பகுதியில் வைத்து குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் வர்த்தக குற்றவிசாரணை பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

அவர் தற்போது குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் தலைமையகத்திற்கு அழைத்து வரப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாட் பதியூதீன் உள்ளிட்ட மூன்று பேரை கைது செய்யுமாறு சட்டமா அதிபர் பதில் காவற்துறை மா அதிபருக்கு அண்மையில் உத்தரவிட்டிருந்தார்.

இதன்படி அவரை கைது செய்வதற்காக 6 காவல்துறை குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டன.

இந்தநிலையில் 6 நாட்களின் பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாட் பதியூதீன் கைது செய்யப்பட்டுள்ளார்.