கொவிட் 19 தொற்று முதலாவதாக ஏற்பட்ட சீனாவில் தற்போது பொருளாதார முன்னேற்றம்

Monday, 19 October 2020 - 14:02

%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D+19+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D
கொவிட் 19 தொற்று முதலாவதாக ஏற்பட்ட சீனாவில் தற்போது பொருளாதார முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகின் இரண்டாது பாரிய பொருளாதாரத்தினை காட்டும் சீனாவில் கடந்த ஜூலை முதல் செப்டம்பர் மாதம் வரையில் 4.9 சதவீத வளர்ச்சியினை கண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளது.

எனினும், பொருளாதார வல்லுனர்கள் எதிர்பார்க்கும், 5.2 சதவீத வளர்ச்சியை காட்டிலும் குறைவானதாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த வருடத்தின் பிற்பகுதியில் ஏற்பட்ட கொவிட் 19 தொற்றின் தாக்கம் காரணமாக சீனாவில் தொழிற்சாலைகள் மற்றும் உற்பத்தி நிறுவனங்களின் செயற்பாடுகள் நிறுத்தப்பட்டன.

இதனால் இந்த வருடன் முதல் மூன்று மாதங்களில் சீனாவின் பொருளாதாரம் 6.8 ஆக குறைவடைந்தது.

1992 ஆம் ஆண்டு முதல் பொருளாதார புள்ளிவிபரங்களை பதிவு செய்ய ஆரம்பிக்கப்பட்டது முதல் இந்த வருடத்திலேயே சீனாவில் பொருளாதார குறிக்காட்டி குறைவடைந்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும் தற்போது பொருளாதாரத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளதனால் சீனா, கொவிட் 19 தொற்றில் மீண்டுவருவதாக சர்வதேச பொருளாதார ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.