ரிசாட் பதியுதீன் விளக்கமறியலில்...!

Monday, 19 October 2020 - 18:05

%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D...%21
கைது செய்யப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீன் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

அவர் இன்று பிற்பகல் கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய அவரை எதிர்வரும் 27 திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது இடம்பெயர்ந்த வாக்காளர்களை மன்னார் பிரதேசத்திற்கு இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகளில் அழைத்து சென்றமை ஊடாக பொது சொத்துக்கள் முறைக்கேடாக பயன்படுத்தியமை மற்றும் தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பிலும் அவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இதற்கமைய 6 காவல்துறை குழுக்கள் அவரை தேடி விசாரணைகளை முன்னெடுத்திருந்த நிலையில் தெஹிவளை - எபனேசர் வீதியில் அமைந்துள்ள மாடிக்குடியிருப்பில் தலைமறைவாகியிருந்த ரிஷாட் பதியூதீன் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டிருந்தார்.

அத்துடன் ரிஷாட் பதியுதீன் தலைமறைவாவதற்கு உதவிகளை வழங்கிய கைது செய்யப்பட்ட 7 பேரும் எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது