தடுப்பூசியினை வழங்கும் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ள சீனா...!

Monday, 19 October 2020 - 20:48

%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88+%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE...%21
உலக சுகாதார ஸ்தாபனத்தின் ஏற்பாட்டின் கீழ், கொரோனா வைரஸ் தொற்றுக்கான தடுப்பூசியினை வழங்கும் கூட்டணியுடன், சீனா இணைந்துள்ள நிலையில், சீனா தடுப்பூசியினை வழங்கும் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது.

இந்த தடுப்பூசியினை பிரயோகிக்கும் நோக்கில் அவசியம் தேவைப்படும் மேலும் மூன்று நகரங்களுக்கு அவசர பயன்பாட்டிற்காக விரைவு படுத்தியுள்ளது.

கிழக்கு சீனாவின் சீஜியாங் மாகாணத்தில் உள்ள மூன்று நகரங்களுக்கு இந்த தடுப்பூசி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

பொது மக்களுக்கு தடுப்பூசியினை பிரயோகிப்பதற்கு முன்னதாக முக்கிய குழுவினருக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படும் என சீன உத்தியோகபூர்வ செய்தி ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

தடுப்பூசி அனுப்பி வைக்கப்பட்டு ஒரு மணி நேரத்தினுள் 20 பேருக்கு பிரயோகிக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தடுப்பூசி வழங்கப்பட்டவர்களில் பெரும்பான்மையானவர்கள் உடனடியாக வெளிநாடு செல்ல வேண்டியவர்கள் என செய்தி ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

கடந்த வருடம் வுஹான் மாகாணத்தில் கொரோனா வைரஸ் தொற்று ஆரம்பமானதன் பின்னர் பல நாடுகளில் தடுப்பூசி மருந்தை கண்டுபிடிக்கும் செயல்பாட்டுகளில் ஈடுபட்டன.

தற்போது பல ஒளடத உற்பத்தியாளர்கள் தடுப்பூசி உற்பத்தி நடவடிக்கைகளின் இறுதி கட்டத்தை அடைந்துள்ளனர் அல்லது அனுமதி பெறுவதற்காக தமது உற்பத்திகளை சமர்ப்பித்துள்ளனர்.

சீனாவில் மட்டும் தற்போது 11 உற்பத்தியாளர்கள் இறுதி அனுமதிக்காக காத்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, 9 தடுப்பூசி உற்பத்தியாளர்களின் உற்பத்தி தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்படுவதாக உலக சுகாதார ஸ்தாபனம் அறிவித்துள்ளது.