கடுமையான சட்ட திட்டங்களை அமுல்படுத்த வேண்டும்...!

Monday, 19 October 2020 - 20:56

%E0%AE%95%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%85%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D...%21
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இத்தாலியில் புதிய முடக்கல்களை தவிர்க்க வேண்டுமானால், கடுமையான சட்ட திட்டங்களை அமுல்படுத்த வேண்டியுள்ளதாக இத்தாலிய பிரதமர் கியூசிப்பே கொண்டி தெரிவித்துள்ளார்.

பொது இடங்களை மூடுவதற்கு உரிய நடவடிக்கைகளை நகர முதல்வர்கள் மேற்கொள்ள முடியும் என்பதுடன், விருந்தகங்களை மூடும் நேரம் மற்றும் எண்ணிக்கை என்பனவற்றை அவர்கள் தீர்மானிக்க முடியும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தவிர, புதிய பல்வேறு பாதுகாப்பு செயல்பாடுகள் அமுல்படுத்தப்படும் எனவும் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் பிரதமர் தெரிவித்துள்ளார்.

புதிதாக நேற்று மேலும் 11 ஆயிரத்து 705 பேர் இத்தாலியில் பதிவாகியுள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்று முதன் முதலாக சர்வதேசத்தை தாக்கிய போது, ஐரோப்பிய நாடுகளில் அதிக இழப்புக்களை இத்தாலியே எதிர் கொண்டது.

இதுவரை, இத்தாலியில் 4 லட்சத்து 14 ஆயிரம் பேருக்கும் அதிகமானவர்கள் தொற்றாளர்களாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அவர்களில் 36 ஆயிரத்து 500 பேர் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, பிரான்ஸ், பெல்ஜியம், சுவிஸ்சலாந்து, செக் குடியரசு, அயலாந்து மற்றும் ஜேமன் ஆகிய ஐரோப்பிய நாடுகளும், கொரோனா வைரஸ் தொற்று பாரிய அளவில் தாக்கியுள்ளன.