3ஆவது விவாதத்திற்கு தயாராகும் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ஜோ பைடன்

Tuesday, 20 October 2020 - 9:11

3%E0%AE%86%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%9F%E0%AF%8A%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%9C%E0%AF%8B+%E0%AE%AA%E0%AF%88%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D
அமெரிக்காவில் அதிபர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மூன்றுமுறை நேருக்கு நேர் விவாதம் மேற்கொள்ளும் வழக்கம் உள்ளது. அதன்படி, அதிபர் குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிடும் டொனால்ட் ட்ரம்ப் - ஜனநாயகக் கட்சி சார்பில் ஜோ பைடன் இருவரும் அண்மையில் நேருக்கு நேர் விவாதம் நடத்தினர்.

இதற்கிடையே, அதிபர் ட்ரம்புக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மருத்துவமனையில் இருந்து திரும்பிய அவர், தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் இருவருக்கும் இடையிலான இரண்டாவது விவாதத்தின் போது வெளியுறவுக் கொள்கை உள்ளிட்ட சில தலைப்புகள் விவாதிக்கப்படவில்லை என்ற சர்ச்சை தற்போது வெடித்துள்ளது.

எவ்வாறாயினும், இரண்டாவது விவாதத்தின் போது அமைப்பாளர்கள் வெளியுறவுக் கொள்கையைப் பற்றி விவாதிக்கவில்லை என்று குடியரசுக் கட்சி குற்றம் சாட்டுகிறது, அதே நேரத்தில் ஜனநாயகக் கட்சி தற்போதைய கொரோனா நிலைமை குறித்து விவாதிக்கவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளது.