கொரோனா வைரஸ் பரவலுக்கு இதுவே காரணம்- உலக சுகாதார அமைச்சு விடுத்துள்ள செய்தி

Tuesday, 20 October 2020 - 11:13

%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE+%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%87+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-+%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0+%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF
தனிமைப்படுத்தல் சட்டங்களை முறையாக பின்பற்றாக காரணத்தினாலேயே சர்வதேச ரீதியில் 40 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இப்போது கொவிட் 19 வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக என்று உலக சுகாதார அமைப்பு (WHO) தெரிவித்துள்ளது.

ஐரோப்பாவில் மாத்திரம் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 2 இலட்சத்து 50 ஆயிரத்தை கடந்துள்ளன. இரண்டாவது முறையாக அயர்லாந்து மற்றும் வேல்ஸை முடக்குவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அயர்லாந்து பிரதமர் மைக்கேல் மார்ட்டின் அயர்லாந்து மக்களுக்கு தங்கள் வீடுகளில் நேரத்தை செலவிடுமாறு அறிவுறுத்தியுள்ளார்.

இருப்பினும், உலக சுகாதார அமைப்பு (WHO) வெளியிட்டுள்ள அறிக்கையில், அவுஸ்திரேலியா, சீனா, ஜப்பான் மற்றும் தென் கொரியா ஆகியவை சமீப காலங்களில் நோயறிதல்களை விரைவுபடுத்தியதன் மூலமாகவும் தனிமைப்படுத்தலை அதிகரித்ததன் ஊடாகவும் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தியுள்ளன.