கொழும்பில் காவல் துறை பரிசோதகர் ஒருவருக்கு கொரோனா...!

Tuesday, 20 October 2020 - 16:01

%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88+%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%87%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE...%21
கொழும்பு - கோட்டை காவல் நிலையத்தில் கடமையாற்றும் காவல் துறை பரிசோதகர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் அவருடன் நெருங்கி பழகியவர்கள் தொடர்பில் அறிந்து கொள்ள விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொவிட்-19 தொற்றினால் பீடிக்கப்பட்டிருந்த மேலும் 17 பேர் இன்று குணமடைந்துள்ளனர்.

சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, நாட்டில் கொவிட்-19 தொற்றிலிருந்து இதுவரையில் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3 ஆயிரத்து 457 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் கொவிட் 19 தொற்றால் பீடிக்கப்பட்டுள்ள 2 ஆயிரத்து 215 பேர் நாட்டில் உள்ள வைத்தியசாலைகளில் தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips