காட்டுத்தீயினை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர பாரிய நடவடிக்கை...!

Tuesday, 20 October 2020 - 19:52

%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88+%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%B0+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88...%21
அமெரிக்காவின் மேற்கு மானிலமான கொலராடோவில் ஏற்பட்ட பாரிய காட்டுத்தீயினை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரும் நோக்கில் பாரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மலைப்பாங்கான மற்றும் அடர்ந்த காட்டை கொண்டுள்ள இந்த மானிலத்தில் பெரும் பரப்பைக் கொண்ட தேசிய பூங்காவும் உள்ளன.

இந்த மானிலத்தில் உள்ள சில பகுதிகள் கடல் மட்டத்தில் இருந்து ஒரு மைல் வரை உயரத்தில் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இரண்டு லட்சம் ஏக்கர் விஸ்தீரணமான காடுகள் முற்றாக அழிந்து உள்ள நிலையில், கொலராடோ மானில சரித்திரத்திலே அதிக காடு அழிந்துள்ள சம்பவம் இதுவென தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதிப்படைந்துள்ள பிரதேசங்களில் உள்ள குடியிருப்பாளர்களை கட்டாயமாக பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

இந்த வருட ஆரம்பத்தில், இதே பிரதேசத்தில் ஏற்பட்ட காட்டு தீ காரணமாக ஒரு லட்சத்து 39 ஆயிரம் ஏக்கர் காடு அழிந்தமை குறிப்பிடத்தக்கது.