உலக சுகாதார அமைப்பு ஐரோப்பிய நாடுகளுக்கு எச்சரிப்பு..!!

Friday, 23 October 2020 - 14:44

%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0+%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%90%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81..%21%21
ஐரோப்பிய நாடுகளில் பரவி வரும் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை பற்றி உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.

ஐரோப்பிய கண்டத்தில் தற்போது பரவியுள்ள கொரோனா தொற்றை விட இரண்டாம் அலையானது மிக அபாயகரமானதாக இருக்கும் என அவ்வமைப்பு மேலும் தெரிவித்துள்ளது.

பலத்த பயண கட்டுப்பாட்டுக்களை விதித்துள்ள இத்தாலி நாட்டில், கடந்த வாரங்களில் கொரோனா தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

தினமொன்றில் இனங்காணப்பட்ட அதிக எண்ணிக்கையிலான கொரோனா தொற்றுறுதியானவர்கள் 16,079 பேர் நேற்றைய தினத்தில் இனங்காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அந்நாட்டு லொம்போட் மற்றும் பிட்மோன் பிரதேசங்களிலிருந்து அதிகமான தொற்றுறுதியானவர்கள் கண்டறியப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்நிலையில் அயர்லாந்து இரண்டாவது முறையாகவும் நாடுமுழுவதும் ஊரடங்கு உத்தரவை பிரப்பித்துள்ளது.

ஜர்மனியில் கொரோனா தொற்று காரணமாக அந்நாடு பெரும் சவால்களுக்கு முகங்கொடுத்துவருகின்றது.

இதுவரையில் அதிக நோய் தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடத்திலுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.