தப்பி சென்ற கொரோனா தொற்றாளர் பயணித்த இடங்கள் இதோ..!

Friday, 23 October 2020 - 15:49

%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%87%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%A4%E0%AF%8B..%21
கொஸ்கம பிரதேச வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்ற கொவிட் 19 தொற்றுறுடைய இளைஞர் பொறளை – சஹஸ்புர அடுக்குமாடி குடியிருப்பு தொகுதியின் 13 மாடியில் உள்ள வீடொன்றில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டார்.

காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண இந்த தகவலை எமது செய்தி சேவைக்கு உறுதிப்படுத்தினார்.

26 வயதான குறித்த இளைஞனுக்கு கொவிட் 19 தொற்றுறுதியானதை அடுத்து இன்று அதிகாலை 1.30 அளவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

எனினும் இன்று முற்பகல் அங்கிருந்து அவர் தப்பிச் சென்ற நிலையில், தேடல்களின் பின்னர் கண்டுபிடிக்கப்பட்டார்.

இந்தநிலையில் கொஸ்கம பகுதியில் இருந்து பொறளை பகுதிக்கு அவர் சென்ற வழித்தடம் தொடர்பிலும் தெரியவந்துள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய கொஸ்கம பகுதியில் இருந்து ஒருகொடவத்தை பகுதிக்கு பேருந்தில் அவர் பயணித்துள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய அந்த பேருந்து தொடர்பில் தகவல் திரட்டப்பட்டு வருகிறது.

பின்னர் ஒருகொடவத்தை பகுதியில் இருந்து பொறளை வரை நடந்து வந்துள்ளதாக குறித்த இளைஞர் கூறியுள்ளார்.

எனினும் அவர் வெளியிட்டுள்ள தகவலின் உண்மை தன்மை தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

அத்துடன் அவர் தங்கியிருந்த பொறளை – சஹஸ்புர அடுக்குமாடி குடியிருப்பு தொகுதியின் 13 ஆவது மாடியில் உள்ள வீடு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் தனிமைப்படுத்தல் மற்றும் தொற்று நீக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம் குறித்த இளைஞர் மீண்டும் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன் குறித்த இளைஞனின் குடும்ப உறுப்பினர்கள் சிலருக்கும் கொவிட் 19 தொற்றுறுதியான நிலையில் சிகிச்சைகளுக்காக கொஸ்கம பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips