சர்வதேச ரீதியில் அதிகரித்துச் செல்லும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை

Saturday, 24 October 2020 - 20:01

%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A+%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88

போலாந்து ஜனாதிபதிக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் அவரது உடல் நிலை சீராக நிலவுவதாக அந்த நாட்டு அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

அவருக்கு நேற்றைய தினம் கொவிட்-19 தொற்றுறுதியானதாக வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.

போலாந்தில் கொவிட்-19 தாக்கம் தற்போது அதிகரித்துள்ள நிலையில் கடந்த 24 மணித்தியாலங்களில் அங்கு 13 ஆயிரத்து 628 பேருக்கு தொற்றுறுதியாகியுள்ளது.

அத்துடன் நேற்றைய தினமும் அங்கு 13 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.

இதற்கமைய போலாந்தில் இதுவரையில் 2 லட்சத்து 28 ஆயிரத்து 318 பேருக்கு தொற்றுறுதியாகியுள்ளதோடு 4 ஆயிரத்து 172 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை சர்வதேச ரீதியில் 4 கோடியே 25 லட்சத்து 59 ஆயிரத்து 837 பேருக்கு இதுவரையில் கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.

அத்துடன் சர்வதேச ரீதியாக 11 லட்சத்து 50 ஆயிரத்து 284 பேர் இதுவரையில் உயிரிழந்துள்ளனர்.

எவ்வாறாயினும் தொற்றுறுதியான 3 கோடியே 14 லட்சத்து 63 ஆயிரத்து 75 பேர் இதுவரையில் குணமடைந்துள்ளனர்.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips