கொரோனா தொடர்பில் தற்போதைய நிலவரம் - முழுமையான விபரங்கள்...!

Monday, 26 October 2020 - 13:33

%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D++-++%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D...%21
பிரபுக்கள் பாதுகாப்பு சேவையுடன் இணைந்து சேவையாற்றும் காவல்துறை விசேட அதிரடி படையின் சில உத்தியோகத்தர்களுக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.

இதன் காரணமாக ராஜகிரிய களனி மற்றும் களுபோவில பகுதிகளிலுள்ள விசேட அதிரடி படையினர் முகாம்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

அத்துடன் அங்கு சேவையாற்றும் 10 சேவையாளர்களுக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.

குறித்த முகாம்களுடன் தொடர்புடைய சகல சிப்பாய்களும் மீண்டும் முகாம்களுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

முகாம்களில் சமையலுக்காக மீன்கொள்வனவு செய்வதற்கு பேலியாகொடை மீன் சந்தை சென்றிருந்த நிலையில் அவர்களுக்கு தொற்றுறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை மட்டகளப்பு மாவட்டத்தில் மேலும் 16 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.

கோரளைபற்று மத்திய சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பகுதியிலேயே அவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அழகையா லதாகரன் தெரிவித்தார்.

அத்துடன் அவர்களுடன் தொடர்புடையவர்களுக்கு தற்போது பி.சீ.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை மட்டக்களப்பில் கொரோனா தாக்கம் அதிகரித்து செல்கின்ற வேளையில் ஓட்டமாவடி பிரதேசத்தில் டெங்கு காய்ச்சலின் தாக்கமும் தீவிரமாக பரவுவதாக கிழக்கு மாகாண சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.

கடந்த ஓரிரு மாதங்களுக்குள் 114 டெங்கு நோயாளர்கள் அங்கு அடையாளம் காணப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டுள்ளதுடன் ஒருவர் மரணித்துள்ளார்.

இவ்வாறான சூழ்நிலையில் தற்போது அமுலாகியுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்ட நிலைமையை பயன்படுத்தி குறித்த பிரதேசத்தில் உள்ள மக்கள் தங்களின் வீடுகளையும் சூழலையும் சுத்தமாக வைத்து டெங்கு நுளம்பு பெருகுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை தலவாக்கலை - கொட்டக்கலை பகுதிகளில் மூன்று பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பேலியாகொடை கொத்தணியுடன் தொடர்புடைய மூவருக்கே இவ்வாறு தொற்றுறுதியாகியுள்ளதாக கொட்டக்கலை பொது சுகாதார பரிசோதகர் எஸ் சௌந்தர் ராகவன் தெரிவித்தார்.

இந்தநிலையில் கொட்டக்கலை நகரிலுள்ள வர்த்தக நிலையங்களை மூடுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக கொட்டகலை பிரதேச சபையின் தலைவர் ராஜமணி பிரசாந்த் தெரிவித்துள்ளார்.

நாட்டில் இதுவரையில் 7 ஆயிரத்து 875 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.

அவர்களில் 3 ஆயிரத்து 803 பேர் குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.

இந்தநிலையில் தொற்றுறுதியான 4 ஆயிரத்து 54 பேர் தற்போது வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அத்துடன் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்றுவந்த நிலையில் நேற்று காலை உயிரிழந்த 70 வயதான நபருக்கு கொவிட்19 தொற்றிருந்தமை தெரியவந்துள்ளது.

இதற்கமைய நாட்டில் கொவிட்-19 காரணமாக 16வது மரணம் நேற்று பதிவானது.

கொழும்பு 2 பகுதியை சேர்ந்த ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

அவரது இரத்தத்தில் கிருமி தொற்று காணப்பட்டமையினால் உடலில் ஏற்பட்ட சிக்கலான நிலைமை காரணமாக அவர் கடந்த 23 ஆம் திகதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் அவர் உயிரிழந்தமைக்கு குறித்த சிக்கல்களான நிலமையே காரணம் என அறவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை நிலைமைக்கு ஏற்ப விரைவாக உரிய தீர்மானங்கள் மேற்கொள்ளப்படாவிடத்து எதிர்வரும் இரண்டு மாதங்களில் உயிரிழப்புகள் அதிகரிக்குமென அரச மருத்துச அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது.

அந்த சங்கத்தின் சிரேஷ்ட வைத்தியர் ஹரித அளுத்கே இதனை குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் தமது சங்கத்தினர் விடுக்கின்ற ஆலோசனைகளை செயற்படுத்துவதில் கால தாமதம் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த ஒருவரிடம் இருந்து மற்றுமொருவருக்கு தொற்று ஏற்படுவதற்கான எந்தவொரு நிலைமையும் இல்லை என்று தொற்றுநொயியல் விஞ்ஞானப் பிரிவின் விசேட வைத்தியர் சுதத் சமரசிங்க தெரிவித்துள்ளார்.

இதுவரையில் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான நோயாளர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் அடிப்படையில் வைரஸ் உடலில் தொற்றிய பின்னர் நோய் அறிகுறி அற்ற மற்றும் சிறு அளவில் அறிகுறி தென்படும் நபரிடமிருந்துஇ 10 நாட்களின் பின்னர் நோய் மீண்டும் பரவும் நிலை இருக்காது என கண்டறியப்பட்டுள்ளது.

எனவே தொற்றிலிருந்து குணமடைந்து வீடுதிரும்புபவர்கள் தொடர்பில் அச்சம்கொள்ளத் தேவையில்லை.

வழமைப்போல அன்றாட செயற்பாடுகளை மேற்கொள்ள முடியும்.

அவரின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி இருப்பனால் அவர் மீண்டும் நோயாளராகும் நிலை ஏற்படாது என்பதுடன் அவரிடமிருந்து மற்றுமொருவருக்கு நோய் பரவும் நிலைமை இருக்காது.

எனவே கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து சமூகத்துடன் இணைந்து தங்களின் பணியிடங்களுக்கு செல்பவர்களை முறையற்ற விதத்தில் நடத்துவது பொறுத்தமற்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips