சீனாவின் நகரமொன்றில் 4.7 மில்லியன் மக்களுக்கு கொரோனா பரிசோதனை

Monday, 26 October 2020 - 16:48

%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+4.7+%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE+%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88
சீனாவின் சிங்-ஜியாங் மாகாணத்தின் கஷ்கார் நகரத்தில் கொரோனா தொற்றுறுதியான பெண்ணொருவர் இனங்காணப்பட்டதனை அடுத்து, அந்த நகரத்தில் வாழும் 4.7 மக்கள் தொகையினரையும் சோதனைக்குட்படுத்த சுகாதார அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

ஆடைத் தொழிற்சாலையின் பெண்ணொருவர் கொரோனா தொற்றுக்குள்ளாகி இருப்பது பரிசோதனையின் ஊடாக தெரியவந்தது.

கடந்த 10 நாட்களின் பின்னர் சீனாவில் சமூக பரவலில் கண்டறியப்பட்ட முதலாவது தொற்றாளர் இவர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனையடுத்து அப் பகுதியில் உள்ள பாடசாலைகளை மூடிய அதிகாரிகள், கெவிட் 19 தொற்று பரிசோதனைகள் முடிவுறும் வரையில் நகரத்தை விட்டு வெளியேறுவதை தடை செய்துள்ளனர்.

இதுவரையில் அங்கு 2.8 மில்லியன் மக்களுக்கு தொற்றுப் பரிசோதனையை முன்னெடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இப் பரிசோதனையின் முடிவுகள் எதிர்வரும் இரு நாட்களுள் பெற்றுக்கொள்ளப்படவுள்ளது.

பரிசோதனைகளின் போது 137 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கு எவ்விதமான கொரோனா அறிகுறிகளும் தென்படாமை சுகாதார பிரிவினரை ஆச்சரியத்திற்கு உள்ளாக்கியுள்ளது.