ஒக்ஸ்போர்ட் தயாரித்த கொவிட் 19 தடுப்பூசி வெற்றி

Monday, 26 October 2020 - 16:03

%E0%AE%92%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D+19+%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BF+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF
பிரித்தானியாவின் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழத்தின் விஞ்ஞானிகள் மற்றும் எஸ்ட்ரா-செனேகா மருந்து நிறுவனம் இணைந்து தயாரித்த கொவிட் 19 தடுப்பூசி, முதல் பரிசோதனைகளில் வெற்றியளித்துள்ளதாக பினான்சியல் டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

அந்த பத்திரிகையை மேற்கோள் காட்டி ரொய்டர்ஸ் செய்திச் சேவை, ஒக்ஸ்போர்ட் தயாரித்த தடுப்பூசியினால் வயோதிபர்களின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் ரீ செல்கள் அதிகரிக்கப்படுவதனை அவதானிக்க முடிவதாக குறிப்பிட்டுள்ளது.

எனினும் குறிப்பிட்ட தடுப்பூசியினால் வயதானவர்களுக்கு கொரோனா தொற்றிலிருந்து முழுமையாக நிவாரணம் கிடைக்கும் என்பது பற்றி நன்கு ஆராயப்பட வேண்டும் எனவும் பினான்சியல் டைம்ஸ் பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.