ஈரானில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்றாளர்கள்

Monday, 26 October 2020 - 17:35

%E0%AE%88%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
ஈரான் நாட்டில் கொரோனா தொற்றுறுதியானவர்கள் மற்றும் உயிரிழப்புக்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வருவதாக வெளிநாட்டு செய்திச் சேவைகள் தெரிவித்துள்ளன.

இதுவரையில் தினமொன்றுக்கு 300 உயிரிழப்புக்கள் பதிவடைந்துள்ளது. அதன்படி ஒவ்வொரு 5 நிமிடத்திற்கு ஒருமுறையும் 5 உயிரிழப்புக்கள் நிகழ்கின்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மக்கள் சமூக இடைவெளியை பேனாததன் காரணமாகவே கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதாக ஈரானின் சுகாதார அமைச்சர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

சுகாதார கட்டுப்பாடுகளை மீறுவதன் விளைவாக தினசரி உயிரிழப்புகள் 600 ஆக உயர்வடைய வாய்ப்பு உள்ளதாகவும் அந்நாட்டு மக்களுக்கு சுகாதார அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.

அந்நாட்டில் தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை ஐந்து இலட்சத்து 68,896 ஆக பதிவாகியுள்ளதோடு, கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 2,616ஆக பதிவாகியுள்ளது.