பேஸ்புக் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்றாளருக்கு பாக். பிரதமர் கடிதம்

Monday, 26 October 2020 - 19:12

%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D.+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D
பேஸ்புக்கில் இஸ்லாமிய எதிர்ப்பு கருத்துக்களை தடை செய்யுமாறு கோரி, பேஸ்புக் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்றாளர் மார்க் சக்கர்பேர்க்கிற்கு, பாகிஸ்தானின் பிரதமர் இம்ரான் கான் கடிதம் ஒன்றை அனுப்பிவைத்துள்ளார்.

இஸ்லாமிய எதிர்ப்பு கருத்துக்கள் காரணமாக, கடுமைவாதம், வெறுப்புணர்வு மற்றும் வன்முறைகள் என்பன அதிகரிப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

குறிப்பாக சமுகவலைதளங்களில் இந்தநிலைமை அதிகமாக இருக்கிறது.

ஃபரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மெக்ரோன் வெளியிட்ட இஸ்லாமிய எதிர்ப்பு கருத்தொன்றை அடுத்து, இம்ரான் கான் இந்த கடிதத்தை அனுப்பி இருப்பதாக கூறப்படுகிறது.

எவ்வாறாயினும் பேஸ்புக் நிறுவனம் இவ்வாறான வெறுப்புணர்வு கருத்துக்களை நீக்குவதற்கான பொறிமுறை ஒன்றை கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.