இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 8 ஆயிரத்தை கடந்தது

Monday, 26 October 2020 - 20:23

%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+8+%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88+%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81
இலங்கையில் கொவிட் 19 வைரஸ் தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 8 ஆயிரத்தை கடந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

தற்போது நாட்டில் 8,152 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு, அவர்களில் 4,203 பேர் தொடர்ந்து மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சைப் பெற்று வந்தவர்களில் இதுவரையில் 3,933 பேர் பூரண குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.