ரிஷாட் பதியுதீன் கைதாகும் போது வீசப்பட்ட கையடக்க தொலைபேசி கண்டுபிடிப்பு

Tuesday, 27 October 2020 - 19:41

%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF+%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
95 லட்சம் ரூபாவுக்கும் அதிக தொகையான அரச பணத்தை முறையற்ற விதத்தில் பயன்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் உள்ளிட்ட 3 பேரையும் எதிர்வரும் 10 ஆம் திகதி வரை மீளவிளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது.

அத்துடன் அவர்கள் மூன்று பேருக்கும் பிணை வழங்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையையும் நிராகரிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், ரிஷாட் பதியுதின் மறைந்திருப்பதற்கு உதவிய சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட விசேட வைத்தியர் உள்ளிட்ட 6 சந்தேகநபர்களும் 3 லட்சம் ரூபா பெறுமதியான சரீர பிணையில் விடுக்கப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கின் இரண்டாவது சந்தேகநபரான சங்சுதீன் மொஹமட் யாசின் என்பவரை உடனடியாக நீதிமன்ற வைத்தியரிடம் முன்னிலைப்படுத்தி மருத்துவ அறிக்கையை சமர்பிக்குமாறும் நீதவான் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு உத்தரவிட்டார்.

இதேவேளை இந்த வழக்கின் பிரதான சந்தேக நபர்கள் இன்றைய தினம் நீதமன்றில் முன்னிலைப்படுத்தப்படவில்லை.

தொலை காணொளி ஊடாக இன்று வழக்கு விசாரணை இடம்பெற்றுள்ளது.

குறிப்பாக முதல் மூன்று சந்தேக நபர்கள் தொடர்பிலும் தற்போது முன்னெடுக்கப்படுகின்ற விசாரணை நிறைவடையவில்லை எனவும் அவர்களுக்கு பிணை வழங்கப்படுமாயின் அவர்கள் நீதிமன்றத்தை புறக்கணிக்க கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாக சட்டமா அதிபர் சார்பில் நீதிமன்றில் முன்னிலையான பிரதி மன்றாடியர் நாயகம் திலிப பீரிஸ் இதன்போது மன்றுரைத்துள்ளார்.

அத்துடன் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் தெஹிவளை பகுதியிலுள்ள வீடொன்றில் வைத்து கைது செய்யப்பட்ட போது அவரது எப்பல் ரக கையடக்க தொலைபேசி குறித்த வீட்டிலிருந்து வீசப்பட்டிருந்ததாக பிரதி மன்றாடியார் நாயகம் திலிப பீரிஸ் கூறியுள்ளார்.

பின்னர் விசாரணை அதிகாரிகளின் ஊடாக குறித்த கையடக்க தொலைபேசி கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் குறித்த கையடக்க தொலைபேசி அரச இரசாயன பகுப்பாகுய்வு திணைக்களத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் பிரதி மன்றாடியர் நாயகம் திலிப பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இதேவேளை நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் பயன்படுத்தி சொகுசு ஜீப் ரக வண்டியின் பின்புற ஆசனத்திற்கு அடியிலிருந்து அவரது தேசிய அடையாள அட்டை மற்றும் நாடாளுமன்ற அடையாள அட்டை என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அவர் மன்றில் அறிவித்துள்ளார்.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips