ரஷ்யாவினால் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகள்...!

Wednesday, 28 October 2020 - 9:29

%E0%AE%B0%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D...%21
ரஷ்யாவினால் தயாரிக்கப்பட்ட கொவிட்-19 தடுப்பூசி, உலக சுகாதார ஸ்தாபனத்தின் அனுமதிக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

ஸ்புட்னிக் - ஃபைவ்  என பெயரிடப்பட்டுள்ள இந்த தடுப்பூசிக்கு, நேரடியாக முதலீடு செய்யும் ரஷ்யாவின் நிதியத்தின் மூலம், உலக சுகாதார ஸ்தாபனத்தின் அனுமதியை பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கொவிட்-19 தடுப்பூசிக்கு முதலாவது அனுமதி வழங்கிய நாடு ரஷ்யாவாகும்.

எனினும், அது பெருமளவில் சோதனைக்கு உட்படுத்துவதற்கு முன்னதாகவே இந்த நடவடிக்கை இடம்பெற்றதாக விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.

இதன் காரணமாக, அந்த தடுப்பூசியின் பாதுகாப்பு மற்றும் செயல்திறன் என்பன குறித்து சில விஞ்ஞானிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

அவசர பயன்பாட்டுக்கான பட்டியல் முறைமையின்கீழ், இந்த தடுப்பூசிக்கு உலக சுகாதார ஸ்தாபனத்திடம் ரஷ்யா அனுமதியை கோரியுள்ளது.

இதற்கமைய, அனுமதி கிடைக்கப்பெற்றதால், அதன் பாதுகாப்பு மற்றும் செயல்திறன் தொடர்பான உறுதிப்பாடு கிடைக்கும்.

இதையடுத்து, அந்த தடுப்பூசியை உலகம் முழுவதும் பகிர்ந்தளிக்கும் சந்தர்ப்பம் ரஷ்யாவுக்கு ஏற்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips