மேல் மாகாணம் முழுவதும் நாளை நள்ளிரவு முதல் 2ம் திகதி அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு உத்தரவு

Wednesday, 28 October 2020 - 13:27

%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%A8%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D+2%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88+5+%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF+%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88+%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81
மேல் மாகாணம் முழுவதும் நாளை நள்ளிரவு முதல் 2ம் திகதி அதிகாலை காலை 5 மணி வரையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலாக்கப்படவுள்ளது.

இராணுவத் தளபதி ஷவேந்திரசில்வா இதனைத் தெரிவித்துள்ளார்.

திங்கட்கிழமை காலை 5 மணி முதல் தற்போது ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள இடங்களில் தொடர்ந்தும் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள இடங்களில், அத்தியாவசிய பொருட்கள் மற்றும் மருந்துப் பொருட்களை கொள்வனவு செய்வதற்கு திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளில் வாய்ப்பளிக்கப்படும்.

இந்த தினங்களில் காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரையில் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை நிலையங்கள் மற்றும் மருந்தகங்கள் என்பன திறக்கப்பட்டிருக்கும்.

கொழும்பு மற்றும் குருணாகலை மாவட்டங்களில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள இடங்களில், செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் காலை 8 மணி முதல் இரவு 10 மணிவரையில் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை நிலையங்கள் மற்றும் மருந்தங்களை திறப்பதற்கு அனுப்பதிக்கப்படும்.



Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips