மேல்மாகாணத்தில் உள்ள மக்களுக்கு இராணுவத் தளபதியின் முக்கிய கோரிக்கை

Wednesday, 28 October 2020 - 17:12

%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88
மேல்மாகாணத்தில் உள்ள மாவட்டங்களில் தங்கி இருக்கின்ற வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள், அங்கிருந்து வெளியேற வேண்டாம் என்று இராணுவத் தளபதி லெஃப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா கோரிக்கை விடுத்துள்ளார்.

மேல் மாகாணத்தின் கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களுக்கு நாளை நள்ளரவு முதல் ஊரடங்கு சட்டம் அமுலாக்கப்படவுள்ளது.

இந்த ஊரடங்கு சட்டம் தற்காலிகமானதே. இது எதிர்வரும் திங்கட் கிழமையுடன் நிறைவு செய்யப்படும்.

இந்தநிலையில் மேல்மாகாணத்தில் இருக்கும் வெளிமாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் இங்கிருந்து வெளிமாவட்டங்களுக்கு செல்வதால், அந்த மாவட்டங்களிலும் கொவிட்19 பரவும் அபாயம் அதிகம் உள்ளது.

எனவே யாரும் கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களில் இருந்து வெளிமாவட்டங்களுக்கு செல்ல வேண்டாம் என்று இராணுவத் தளபதி கோரிக்கை விடுத்துள்ளார்.