அமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தலுக்காக முன்கூட்டியே வாக்களிப்பவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு

Wednesday, 28 October 2020 - 19:19

%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
அமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தலுக்காக முன்கூட்டியே வாக்களிப்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இதுவரையில் 70 மில்லியன் வாக்காளர்கள் தங்களது வாக்குகளைப் பதிவு செய்திருக்கின்றனர்.

இது கடந்த 2016ம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளின் அரைவாசி அளவாகும் என்று அமெரிக்க ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

கொரோனாவைரஸ் பரவல் தீவிரவமாக உள்ள நிலையில், அதில் இருந்து விடுபடும்நோக்கில் மக்கள் முன்கூட்டியே வாக்குகளை பதிவு செய்துவருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, ஜோ பைடன், ஜோர்ஜியாவின் முக்கிய இடங்களில்இன்று பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

அதேநேரம் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மிச்சிகம், விஸ்கொன்சின் மற்றும் நெப்ராஸ்கா பகுதிகளில் தமது பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.