சற்று முன்னர் காவல் துறை ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ள விடயம்...!

Thursday, 29 October 2020 - 7:02

%E0%AE%9A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88+%E0%AE%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D...%21
கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு அமைய அதி வேக நெடுஞ்சாலையினூடான போக்குவரத்துக்களையும் மட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக காவல் துறை ஊடகப் பேச்சாளர் பிரதி காவல் துறை மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

ஹிரு தொலைக்காட்சியில் சற்று முன்னர் இடம்பெற்ற நாளிதழ் கண்ணோட்ட நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதற்கமைய இன்று நள்ளிரவு முதல் அதிவேக நெடுஞ்சாலையினூடான போக்குவரத்துக்கள் மட்டுப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அத்தியாவசிய சேவைகளை தவிர வேறு எந்த நோக்கத்திற்காகவும் மேல்மாகாணத்திற்குள் பிரவேசிக்கவோ, அல்லது வெளியேறவோ அனுமதிக்கப்பட மாட்டாது எனவும் சுட்டிக்காட்டினார்.

இந்த நடவடிக்கையினை தீவிரப்படுத்துவதற்காக மேல் மாகாணத்திற்குள் பிரவேசிக்கும் பகுதியில் விசேட சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அத்துடன் மேல் மாகாணம் மாத்திரமின்றி ஏனைய அனைத்து மாகாணங்களிலும் மக்கள் ஒன்று கூடுவதற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும், இன்று அதிகாலை 6 மணி முதல் மேல் மாகாணத்திலிருந்து வெளியேறும் அனைத்து வாகனங்களையும் விசேட சோதனைக்குட்படுத்தவுள்ளதாகவும் காவல் துறை ஊடகப்பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்தார்.