இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ள கழிவு கொள்கலன்கள்..!

Friday, 30 October 2020 - 16:20

%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%95%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D..%21
பிரித்தானியாவில் இருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்டிருந்த கழிவு கொள்கலன்களில் 20 கொள்கலன்கள் நாளை மீண்டும் கப்பலில் ஏற்றப்படவுள்ளன.

2017 ஆம் ஆண்டு பிரித்தானியாவில் இருந்து இலங்கைக்கு 242 கழிவு கொள்கலன்கள் கொண்டுவரப்பட்டிருந்த நிலையில் அவற்றில் 21 கொள்கலன்களை மீண்டும் அந்த நாட்டுக்கு அனுப்பி வைக்க சுங்க திணைக்களம் இதற்கு முன்னர் நடவடிக்கை மேற்கொண்டிருந்தது.

பின்னர் இது குறித்து மேன்முறையீட்டு நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில், குறித்த கழிவு கொள்கலன்களை மீண்டும் பிரித்தானியாவிற்கு திருப்பி அனுப்புமாறு உத்தரவிடப்பட்டிருந்தது.

இதற்கமைய நாளைய தினம் மேலும் 20 கழிவு கொள்கலன்களை பிரித்தானியாவிற்கு அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக சுங்க திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர், மேலதிக பணிப்பாளர் நாயகம் சுனில் ஜயரத்ன தெரிவித்துள்ளார்.