நீதிமன்றின் மற்றுமொரு அதிரடி உத்தரவு- ட்ரம்பிற்கு தொடரும் சோகம்

Monday, 23 November 2020 - 9:45

%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81-+%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் பென்சில்வேனியா மாநிலத்தின் வாக்குகள் எண்ணுவதை நிறுத்தி வைக்கக்கோரி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தாக்கல் செய்த மனுவை பென்சில்வேனியா நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

வாக்கு எண்ணிக்கையை நிறுத்துவதற்காக ட்ரம்ப் முன்வைத்த சாட்சியங்கள் போதுமானதாக இல்லை என தெரிவித்தே நீதிமன்றம் குறித்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பென்சில்வேனியா மாநிலத்தின் உத்தியோகபூர்வ முடிவுகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. இருப்பினும் பென்சில்வேனியாவின் தோல்வியை ட்ரம்ப் ஏற்றுக்கொள்ளமாட்டார் என தெரியவருகிறது.

எவ்வாறாயினும், குடியரசுக் கட்சி இது தொடர்பில் மேன்முறையீடு செய்ய எதிர்பார்ப்பதாகவும் சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.