மாணவன் மீது துப்பாக்கி பிரயோகம்..!

Monday, 23 November 2020 - 11:28

%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D..%21
எரெவ்வல - தர்மபால வித்தியாலயத்தின் மைதானத்தில் விளையாடிக்கொண்டிருந்த மாணவர் ஒருவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதனால் குறித்த மாணவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

குறித்த மாணவர் விளையாடிக்கொண்டிருந்த வேளையில் அருகிலுள்ள வீட்டு வளாகத்திற்குள் பந்து வீழ்ந்துள்ளது.

பந்தினை எடுக்க சென்ற மாணவர் மீதே இவ்வாறு துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வைத்தியர் ஒருவரால் வாயு துப்பாக்கி ஒன்றின் மூலம் இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ள்பபட்டுள்ளதுடன் வைத்தியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

காவல் துறையினர் இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.