தடுப்பூசிகள் சரியான முறையில் அனைத்து நாடுகளுக்கு பகிரப்பட வேண்டும்

Tuesday, 24 November 2020 - 9:14

%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%AA%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F+%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+
கொவிட்-19 தடுப்பூசி தயாரிக்கும் போட்டியில் உலகின் ஏழ்மையான மற்றும் பின்தங்கிய நாடுகள் நசுக்கப்படக் கூடாதென உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரித்துள்ளது.

தடுப்பூசியை பகிந்தளிப்பதற்கு 4 தசம் 3 பில்லியன் அமெரிக்க டொலர் நிதி அவசியமாகவுள்ளதாகவும் வைத்தியர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ்  தெரிவித்துள்ளார்.

அத்துடன் தடுப்பூசிகள் சரியான முறையில் அனைத்து நாடுகளுக்கு பகிரப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

சில நாடுகளுக்கு தடுப்பூசியை கொள்வனவு செய்ய முடியாத நிலை காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதுவரையில் 4 விதமான தடுப்பூசிகள் சிறப்பான முடிவவை வெளிப்படுத்தியுள்ளன.

குறிப்பாக ஒக்ஸ்போர்ட் பல்கலைகழகத்தில் தயாரிக்கப்படும் தடுப்பூசி 90 சதவீதம் சிறப்பான முடிவை வெளிப்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் ஏனைய நிறுவனங்கள் தயாரித்துள்ள தடுப்பூசிகளைக் காட்டிலும், ஒக்ஸ்போட்ர் பல்கலைககழகத்தின் தடுப்பூசி செலவுக் குறைந்ததாகவும், இடத்துக்கு இடம் நகர்த்துவதற்கு இலகுவானதாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.