ஒரே இரவில் அகற்றப்பட்ட பாரிஸின் மையப்பகுதியில் உள்ள தற்காலிக ஏதிலிகள் முகாம்

Tuesday, 24 November 2020 - 19:46

%E0%AE%92%E0%AE%B0%E0%AF%87+%E0%AE%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95+%E0%AE%8F%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D
ஃப்ரான்ஸ் தலை நகர் பாரிஸின் மையப் பகுதியில் உள்ள தற்காலிக ஏதிலிகள் முகாமை அந்த நாட்டின் காவல்துறையினர் ஒரே இரவில் அகற்றியுள்ளனர்.

இதன்போது அவர்கள் வன்முறையுடன் நடந்துகொண்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

ஃப்ரான்ஸ் நாட்டின் உள்துறை அமைச்சர் ஜெரால்ட் டர்மனின் இந்த சம்பவம் குறித்து "அதிர்ச்சியடைவதாக குறிப்பிட்டுள்ளார்.

அவர்களின் நடவடிக்கைகள் குறித்து முழு அறிக்கையையும் வழங்குமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

டி லா ரிப்பலிக்கில் நூற்றுக்கணக்கான சிறிய கூடாரங்கள் அகற்றப்பட்டுள்ளன.

இதனால் ஏதிலிகள் தெருக்களில் வாழ வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர் என்று கூறப்படுகிறது.

வடக்கு பாரிஸில் உள்ள ஃப்ரான்சின் தேசிய விளையாட்டு மைதானத்திற்கு அருகே இருந்த, சட்டவிரோத ஏதிலிகள் முகாமை காவற்துறையினர் அகற்றிய ஒரு வாரத்திற்குப் பிறகு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.