பிரான்ஸில் நடைமுறைபடுத்தப்பட்டுள்ள கொவிட்-19 கட்டுபாடுகள் இவ்வார இறுதி முதல் குறைக்கப்படுவதாக அந்நாட்டு ஜனாதிபதி அறிவிப்பு

Wednesday, 25 November 2020 - 7:14

%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D-19+%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0+%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
பிரான்ஸில் நடைமுறைபடுத்தப்பட்டுள்ள கொவிட்-19 கட்டுபாடுகள் இந்த வார இறுதி முதல் குறைக்கப்படும் என அந்த நாட்டு ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் அத்தியாவசியமற்ற வர்த்தக நிலையங்கள் திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் கிறிஸ்தவ பண்டிகை காலத்தை மக்கள் தமது குடும்பத்தினருடன் கொண்டாட சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அந்த நாட்டு ஊடகங்களுக்கு நேற்றைய தினம் கருத்துரைத்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை பிரான்சில் உள்ள விருந்தகங்கள் மற்றும் மதுபானசாலைகள் என்பவற்றை திறப்பதற்கு எதிர்வரும் ஜனவரி மாதம் 20 ஆம் திகதி வரையில் அனுமதி வழங்கப்பட மாட்டாது எனவும் அவர் கூறியுள்ளார்.

பிரான்சில் கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 2 தசம் 2 மில்லியனை கடந்துள்ளதோடு 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரணங்கள் பதிவாகியுள்ளன.

இந்தநிலையில் நாடு கொவிட்-19 இரண்டாவது அலையை கடந்துள்ளதாகவும் டிசம்பர் 15 ஆம் திகதிக்கு முன்னர் அதிகளவான கட்டுப்பாடுகள் குறைக்கப்படும் எனவும் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.