தமிழகத்தை அண்மித்துவரும் நிவர் சூறாவளி

Wednesday, 25 November 2020 - 21:07

%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88+%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BF
தமிழகத்தை நிவர் சூறாவளி அண்மித்துவரும் நிலையில் தற்பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நிவர் சூறாவளி காரணமாக தமிழகத்தில் பல பகுதிகளில் பலத்த காற்றுடன் கடும் மழை பெய்துவருகின்றது.

இதனால் மரங்கள் முறிந்து சில பாதிப்புக்களும் ஏற்பட்டுள்ளதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றனர்.

அத்துடன் கடலூர் மாவட்டத்தில் சுமார் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

நிவர் புயல் கடந்த 6 மணி நேரத்தில் 13 கிலோ மீற்றர் வேகத்தில் தமிழகத்தை நோக்கி; நகர்வதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்று நள்ளிரவு அல்லது நாளை அதிகாலை நிவர் புயல் தமிழகத்தின் ஊடாக கரையை கடக்கும் எனவும் அந்த மையம் குறிப்பிட்டுள்ளது.