தேர்தல் கல்லூரியால் உறுதிப்படுத்தப்பட்டால் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறுவேன்...!

Friday, 27 November 2020 - 16:12

%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D...%21
அடுத்த அமெரிக்க ஜனாதிபதியாக ஜோ பைடன் வெற்றிப்பெற்றுள்ளதாக தேர்தல் கல்லூரியால் முறையாக உறுதிப்படுத்தப்பட்டால் தான் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேற தயாரகவுள்ளதாக டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

கடந்த 3 ஆம் திகதி அமெரிக்காவின் ஜனாதிபதி தேர்தல் இடம்பெற்றிருந்த நிலையில் ஜோ பைடன் அதில் வெற்றிப்பெற்றார்.

எனினும் இந்த வெற்றியை அமெரிக்காவின் தற்போதைய ஜனாதிபதி டொனால்ட் டிரம் ஏற்க மறுத்துள்ளார்.

தேர்தலில் மோசடி இடம்பெற்றுள்ளதாகவும் அவர் தொடர்ந்தும் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார்.

வெற்றிபெற தேவையாகவுள்ள 270 தேர்தல் கல்லூரிகளை அதிகளவான எண்ணிக்கையை ஜோபைடன் கைப்பற்றி 6 மில்லியனுக்கு அதிகளவான வாக்குகளை பெற்றிருந்தார்.

எனினும் தேர்தலில் மோசடி இடம்பெற்றுள்ளதாக கூறி டொனால்ட் டிரம்ப் சார்பில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்ட போதும் அவை அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டன.

இந்தநிலையில் ஜோபைடனுக்கு ஆட்சியை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என டொனால்ட் டிரம்பின் நெருங்கியவர்கள் அவரிடம் கோரியுள்ளனர்.

இந்த நிலையில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் வழங்கியுள்ள டொன்ல்ட் டிரம்ப், தேர்தல் முடிவுகளை இதுவரை தம்மால் ஏற்க முடியவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

எனினும் ஜோ பைடன் வெற்றிப்பெற்றுள்ளதாக தேர்தல் கல்லூரியால் முறையாக உறுதிப்படுத்தப்பட்டால் தான் வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேறுவதாக கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.