மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்திடம் இருந்து பொது மக்களுக்கான ஓர் விசேட அறிவித்தல்..!

Monday, 30 November 2020 - 16:59

%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81++%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%93%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%87%E0%AE%9F+%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D..%21
கொரோனா பரவலையடுத்து நாராஹேன்பிட்டி மற்றும் வேரஹெர ஆகிய மோட்டார் வாகன போக்குவரத்து  திணைக்கள அலுவலகங்களில் தற்பொழுது முன்கூட்டிய பதிவு சேவைகள் மாத்திரமே இடம்பெறுகின்றன.

இதற்கமைய குறித்த திணைக்களம் முன்கூட்டிய பதிவு சேவைகளை பெற்றுக்கொள்பவர்களின் நன்மை கருதி புதிய தொலைபேசி இலக்கம் ஒன்றினை அறிமுகப்படுத்தியுள்ளது.

0112 677877 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பினை ஏற்படுத்துவதன் மூலம் முன்கூட்டிய பதிவுகளை மேற்கொள்ள முடியும் என அந்த திணைக்களம் அறிவித்துள்ளது.