அமெரிக்காவில் கொவிட் 19 தடுப்பூசி விநியோக நடவடிக்கைகள் விரைவில் ஆரம்பம்

Tuesday, 01 December 2020 - 11:31

%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D+19+%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BF+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D
அமெரிக்காவில் எதிர்வரும் இரண்டு வாரங்களில் கொவிட்19 நோய்த்தடுப்பூசிகள் விநியோகிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது அமெரிக்காவின் விதி ஒழுங்காமைப்பாளர்களது அனுமதிக்காக காத்திருப்பதாக கூறப்படுகிறது.

தற்போது அமெரிக்காவின் மொடெர்னா நிறுவனம் தமது தடுப்பூசிக்கு அனுமதிகேட்டு, அமெரிக்காவின் விதி ஒழுங்கமைப்பாளர்களிடம் விண்ணப்பித்துள்ளது.

ஏற்கனவே பைசர் மற்றும் பயோன்டெக் நிறுவனங்களும் இதற்கு விண்ணப்பித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் அடுத்த இரண்டு வாரங்களுக்குள் விநியோக நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.

மேலும் 40 மில்லியன் தடுப்பூசிகள் இந்த ஆண்டின் இறுதிக்குள் தயாரித்து நிறைவு செய்யப்படும்.

இந்த தடுப்பூசி இரண்டு தடவைகள் வழங்கப்பட வேண்டும்.

இதன்மூலம் 20 மில்லியன் மக்கள் கொரோனா தொற்றில் இருந்து பாதுகாப்பு பெறுவார்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிறுவனங்களால் தயாரிக்கப்பட்டுள்ள தடுப்பூசிகள் 90 முதல் 94 சதவீதம் வரையில் வினைத்திறன் கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது.