வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன், அவரது குடும்ப உறுப்பினர்கள், மற்றும் அரசின் உயர் மட்ட நிர்வாகிகள் குழுவு ஆகியோருக்கு சீனா கொரோனா தடுப்பூசியை வழங்கியுள்ளதாக ரொய்ட்டர் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் அச்சுறுத்தல் காரணமாக வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன் சீனாவில் இருந்து இரகசியமாக தடுப்பூசி வரவழைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எவ்வாறாயினும், குறித்த தடுப்பூசியானது இன்னும் சோதனை மட்டத்தில் உள்ளதொன்று எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த தகவலை, ஜப்பான் நாட்டின் உளவு அமைப்பும் உறுதி செய்துள்ளதாகவும் ரொய்ட்டர் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த இரண்டு அல்லது மூன்று வாரங்களில் கிம் ஜாங் உன்னின் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டதாக ஜப்பான் உளவு அமைப்பு தெரிவித்துள்ளது.