புரெவி சூறாவளியால் தமிழகம் மற்றும் கேரளாவிலுள்ள விமான நிலையங்களை மூடுவதற்கு தீர்மானம்..!

Friday, 04 December 2020 - 12:34

%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%86%E0%AE%B5%E0%AE%BF+%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D..%21
'புரெவி' சூறாவளி இந்தியாவை நோக்கி செல்கின்ற நிலையில் தமிழகம் மற்றும் கேரளாவிலுள்ள மூன்று விமான நிலையங்களை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த சூறாவளி காரணமாக தமிழகத்தின் சென்னை உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழைவீழ்ச்சி பதிவாகுமென அந்த நாட்டு அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

இதேவேளை, 'புரெவி' சூறாவளி மன்னார் வளைகுடாவில் இருந்து 143 கிலோமீற்றர் தொலைவில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் நாட்டின் பல பகுதிகளில் தொடர்ந்தும் மழையுடனான வானிலை நிலவுமென எச்சரிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக தகவல்களுடன் இணைந்து கொள்கின்றார் வளிமண்டலவியல் திணைக்களத்தின் வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹின்

இதேவேளை, 'புரெவி' சூறாவளி காரணமாக இதுவரையில் ஒருவர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மையம் தெரிவித்துள்ளது.

அத்துடன் 44 ஆயிரத்து 848 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த மையம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் 12 மாவட்டங்களில் 'புரெவி' சூறாவளி தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதோடு 6 பேர் காயமடைந்துள்ளனர்.

50 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதோடு 2 ஆயிரத்து 148 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

இதேவேளை, காற்றுடன் கூடிய மழைக்காரணமாக வவுனியா வேலங்குளம் கிராமசேவகர் பிரிவுக்குற்பட்ட சின்னத்தம்பனை கிராமத்தில் 15 பேர் இடைத்தங்கள் முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

வேலங்குளம் கிராமசேவையாளரின் ஆலோசனைக்கு அமைய குறித்த கிராம மக்கள் தேவாலயம் ஒன்றில் தற்காலிக முகாம் அமைத்து தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

கடும் காற்றுக்காரணமாக குறித்த பகுதியை சேர்ந்த 15 வீடுகள் சேதமடைந்துள்ளன.

இந்த மக்களுக்கு தற்போது அவசர உதவியாக சமைத்த உணவுகள் மற்றும் குழந்தைகளுக்கான பால்மா போன்ற அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளன.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips