நைஜரில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் சுமார் 100 பேர் பலி!

Monday, 04 January 2021 - 14:57

%E0%AE%A8%E0%AF%88%E0%AE%9C%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D+100+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF%21
ஆபிரிக்க நாடான நைஜரில் இரண்டு கிராமங்களில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் சுமார் 100 பேர் அளவில் கொல்லப்பட்டுள்ளனர்.

Tchoma Bangou மற்றும்  Zaroumadareye ஆகிய கிராமங்களிலேயே பயங்கரவாதிகளால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த தாக்குதலில் Tchoma Bangou கிராமத்தில் 70 பேரும் Zaroumadareye கிராமத்தில் 30 பேரும் கொல்லப்பட்டுள்ளனர்.

அத்துடன் பலர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த தாக்குதலுக்கு இதுவரை எவரும் உரிமை கோராத நிலையில் அந்த பகுதிகளில் இராணுவத்தினர் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.