கொரோனாவால் இங்கிலாந்தில் நாடு தழுவிய முடக்கம்..!

Tuesday, 05 January 2021 - 9:53

%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D..%21
இங்கிலாந்தில் முடக்கநிலை இறுக்கமாக அமுலாக்கப்பட்டுள்ளது.

அனுமதிக்கப்பட்ட காரணங்களுக்காக அன்றி, வேறு எந்த காரணங்களுக்காகவும் யாரும் வீட்டில் இருந்து வெளியில் வரக்கூடாது என்று, பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜொன்சன் அறிவித்துள்ளார்.

பாடசாலைகள் மற்றும் கல்லூரிகளும் மூடப்பட்டுள்ளன.

இன்று முதல் அங்கு இணையம் ஊடான கற்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

பிரித்தானியாவில் கொவிட் பரவல் மீண்டும் தீவிரமடைந்துள்ள நிலையில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அடுத்த சில வாரங்கள் இங்கிலாந்துக்கு மிகவும் அச்சுறுத்தலானதும் கடுமையானதுமாக இருக்கும் என்று பொரிஸ் ஜொன்சன் எச்சரித்துள்ளார்.

அதேநேரம் முன்னுரிமை வழங்கப்பட்டு தெரிவு செய்யப்பட்ட 4 பிரிவினருக்கு அடுத்தமாத நடுப்பகுதிக்குள் கொவிட் 19 தடுப்பூசிகள் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.