கொரோனா தடுப்பூசிகள், தென்னாபிரிக்காவில் அடையாளம் காணப்பட்டுள்ள புதிய உரு மாற்றத்துடனான வைரஸுக்கு எதிராக செயல்படும் என்பது தொடர்பில் தங்களுக்கு முழுமையான நம்பிக்கை இல்லை என விஞ்ஞானிகள் கூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானிய அரசாங்கத்தின் அடையாளப்படுத்தப்பட்டதாத விஞ்ஞான ஆலோசகர் ஒருவரை மேற்கோள்காட்டி வெளிநாட்டு ஊடகம் ஒன்று இதனைத் தெரிவித்துள்ளது.
புதிய உரு மாற்றமடைந்த வைரஸ் தொடர்பில் தாம் மிகவும் கவலை கொண்டுள்ளதாக பிரித்தானிய சுகாதார செயலாளர் மெட் ஹென்கொக் நேற்று தெரிவித்திருந்தார்.
பிரித்தானியாவிலும், தென்னாபிரிக்காவிலும் புதிய உரு மாற்றமடைந்த வைரஸ் அண்மையில் கண்டறியப்பட்டது.
இந்த நிலையில், குறித்த இரு நாடுகளிலும் நோயாளர்களின் எண்ணிக்கை அண்மைக்காலமாக அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.