தமிழகத்தில் கொரோனா நிலவரம் தொடர்பான விபரங்கள்...!

Wednesday, 06 January 2021 - 9:43

%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D...%21
தமிழகத்தில் நேற்றைய தினம் 971 பேர் கொவிட்-19 தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.

இதன்படி, தமிழகத்தில் இதுவரையில் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 8 இலட்சத்து 2 ஆயிரத்து 385 ஆக அதிகரித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இதேநேரம், 820 பேருக்கு நேற்றைய தினம் கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.

இதற்கமைய, தமிழகத்தில் தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 8 இலட்சத்து 22 ஆயிரத்து 370 ஆக உயர்வடைந்துள்ளது.

நேற்றைய தினம் 11 மரணங்கள் பதிவான நிலையில், தமிழகத்தில் கொவிட்-19 தொற்றினால் மரணித்தர்களின் மொத்த எண்ணிக்கை 12 ஆயிரத்து 177 ஆக அதிகரித்துள்ளது.

7 ஆயிரத்து 808 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.