இந்தியாவின் பறவைக் காய்ச்சல் தொடர்பில் ஆராய புதிய கண்காணிப்பு மையம்!

Wednesday, 06 January 2021 - 16:26

%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%86%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%21
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் பறவைக் காய்ச்சல் பரவி வரும் நிலையில், அந்த நாட்டின் மத்திய அரசாங்கத்தால் புது டெல்லியில் கண்காணிப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது.

ராஜஸ்தான், மத்திய பிரதேசம், இமாச்சல பிரதேசம் மற்றும் கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களில் பறவைக் காய்ச்சல் பரவி வருகிறது.

ஏராளமான பறவைகள் இறந்துள்ள நிலையில் நோய் பரவாமல் தடுக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பல மாநிலங்களில் பறவைக் காய்ச்சல் பரவி வரும் நிலையில் டெல்லியில் கண்காணிப்பு மையத்தை இந்திய மத்திய அரசாங்கம் அமைத்துள்ளது.

ஒவ்வொரு மாநிலங்களிலும் மேற்கொள்ளப்படும் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் குறித்து மாநில அதிகாரிகள் இந்த கண்காணிப்பு மையத்தின் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் வழங்க வேண்டும் என இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

அத்துடன் பறவைகள் இறப்பு விபரங்கள் குறித்த அறிக்கையை மாநில அரசாங்கங்கள், வாரம் ஒருமுறை அளிக்க வேண்டும் என்றும் இந்திய மத்திய அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.