உலக சுகாதார அமைப்பின் தலைவர் சீனாவின் தீர்மானம் தொடர்பில் கவலையில்...!

Wednesday, 06 January 2021 - 20:08

%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0+%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D...%21
சீனாவில் ஆய்வுகளை மேற்கொள்ளவுள்ள நிபுணர் குழுவுக்கு அந்த நாட்டு அரசாங்கம் அனுமதி அளிக்காதது ஏமாற்றம் அளிப்பதாக உலக சுகாதார அமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று முதன்முதலாக சீனாவின் வுகான் நகரில் கண்டறியப்பட்டது.

இந்த வைரசின் தோற்றம் குறித்து ஆய்வு செய்ய உலக சுகாதார அமைப்பு நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதற்கமைய சர்வதேச நிபுணர் குழு ஒன்றை ஜனவரி முதல் வாரத்தில் சீனாவுக்கு அது அனுப்பி வைக்க முடிவு செய்யப்பட்டது.

இந்த சிறப்புக்குழு வுகான் நகரில் மனிதர்களிடம் முதன் முதலில் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்ட இடங்களில் முழுமையாக ஆய்வு செய்யும் என தெரிவித்தது.

இந்தநிலையில், சீனாவில் ஆய்வு செய்யவுள்ள நிபுணர் குழுவுக்கு அந்த நாட்டின் அரசாங்கம் அனுமதி அளிக்கவில்லை என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதனோம் தெரிவித்துள்ளார்.

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தொடர்பாக ஆய்வுசெய்ய அங்கு நிபுணர் குழுவை அனுப்ப முடிவுசெய்தோம்.

ஆனால் நிபுணர் குழுவுக்கு அனுமதி அளிக்காமல் சீன அரசாங்கம் தாமதித்து வருவது மிகவும் ஏமாற்றம் அளிப்பதாக உலக சுகாதார அமைப்பின் தலைவர் கவலை வெளியிட்டுள்ளார்.