டொனால்ட் ட்ரம்ப்பின் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிரம் கணக்குகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.!

Friday, 08 January 2021 - 8:56

%E0%AE%9F%E0%AF%8A%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%81.%21
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிரம் கணக்குகளுக்கு விடுக்கப்பட்டுள்ள தடை எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய புதிய ஜனாதிபதியாக ஜோ பைடன் எதிர்வரும் 20 ஆம் திகதி பதவியேற்கும் வரை இந்த தடை நீடிக்கும் என பேஸ்புக்கின் நிறுவுனர் மார்கஸ் ஸக்கர்பெர்க் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் தலைமையகம் என்று அழைக்கப்படுகின்ற வொசிங்டன் டிசியில் உள்ள கட்டிடத்தின் மீது, ஜனாதிபதி டொனால் ட்ரம்பின் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தினர்.

ஜனாதிபதியாக தெரிவாகியுள்ள ஜோ பைடன் வெற்றிபெற்றதாக, அமெரிக்க காங்கிரஸ் உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கவிருந்த நிலையில், இந்த தாக்குதல் இடம்பெற்றிருந்தது.

இந்தநிலையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிரம் கணக்குகள் 24 மணித்தியாலங்களுக்கு முடக்கப்பட்டன.

எவ்வாறாயினும் டொனால்ட் ட்ரம்ப்பின் பதிவுகள் மேலும் வன்முறைகளை தூண்டும் என்பதால் மேலும் இரண்டு வாரங்களுக்கு அவரது பேஸ்புக் மற்றும் இன்டாகிராம் கணக்குகளை முடக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.