ஜோ பைடனின் பதவி பிரமாண நிகழ்விற்கு கலந்து கொள்ள மாட்டேன் - டொனால்ட் ட்ரம்ப்

Saturday, 09 January 2021 - 10:08

%E0%AE%9C%E0%AF%8B+%E0%AE%AA%E0%AF%88%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%95%E0%AE%B2%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D+-+%E0%AE%9F%E0%AF%8A%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D
மேலும் வன்முறையை தூண்டும் ஆபத்து காணப்படுவதால் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் டுவிட்டர் கணக்கு நிரந்தரமாக ரத்து செய்வதற்கு டுவிட்டர் நிறுவனம் நடவடிக்கை எடுத்திருந்தது.

அந்த செய்தியை மேலும் உறுதிபடுத்தும் விதமாக டுவிட்டர் நிறுவனம் வலைப்பதிவு ஒன்றின் மூலம்  அறிவித்திருந்தது.

டொனால்ட் ட்ரம்பின் பிரதான தொடர்பாடல் சாதனமாக டுவிட்டர் காணப்படுவதுடன் அதன் மூலம் அவரால் 88 மில்லியனுக்கும் அதிகமான தன் ஆதரவாளர்களுடன் நேரடியாக தொடர்பாடவும் முடிகின்றது.

அத்தடன் முகப்புத்தக நிறுவனமும் டொனால்ட் ட்ரம்பின் முகப்புத்தக கணக்கை அவரது ஆட்சிக் காலம் நிறைவடையும் வரை ரத்து செய்வதாக அறிவித்திருக்கின்றது.

டொனால்ட் ட்ரம்ப் தனது டுவிட்டர் கணக்கில் ஜோ பைடனின் பதவி பிரமாண நிகழ்விற்கு கலந்துக் கொள்ள மாட்டேன் என பதிவிட்டிருந்தார்.

ஜோ பைடன் எதிர்வரும் 20 ஆம் திகதி அமெரிக்காவின் தலைநகர் வோஷிங்டனில் வெஸ்ட் ப்ரன்டில் அமைந்துள்ள கெபிட்டல் கட்டிடத்தில் அமெரிக்காவின் 46 ஆவது ஜனாதிபதியாக பதவியேற்க உள்ளார்.