இந்திய மருத்துவமனையில் ஏற்பட்ட தீவிபத்தில் பச்சிளம் குழந்தைகள் 10 பேர் உயிாிழப்பு!

Saturday, 09 January 2021 - 14:30

%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+10+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%BE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%21
இந்தியாவின் மஹாராஷ்டிர மாநிலத்தில் பண்டாரா மாவட்டத்தில் இன்று அதிகாலை அரச மருத்துவமனையொன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் 10 பச்சிளம் குழந்தைகள் உயிாிழந்துள்ளனர்.

இச்சம்பவத்தில் மேலும் 07 பேர் காப்பாற்றப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் இந்திய மாநில அரசு இறந்த குழந்தைகளின் பெற்றோருக்கு தலா 5 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்துள்ளது.

மேற்படி சம்பவம் மின்சாரக் கசிவு காரணமாக ஏற்பட்டிருக்கலாம் என தொிவிக்கப்படுகின்றது. எனினும் இத்தீவிபத்துக்கான காரணம் இதுவரை அறியப்படவில்லை.

இது மனதை பிளக்கும் சம்பவமாக அமைந்திருப்பதாக இந்திய பிரதமர் தனது ட்விட்டர் பக்கத்தில் தொிவித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.