கொரோனா தடுப்பூசிகளுக்கு ஈரான் தடை!

Saturday, 09 January 2021 - 17:18

%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE+%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%88%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88%21
அமெரிக்கா மற்றும் பிரித்தானியாவில் தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசிகளுக்கு ஈரான் தடை விதித்துள்ளது.

அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் கொரோனா தாக்கத்தில் உலகில் அதிகபட்ச இறப்புகளைக் கொண்டிருப்பதால் அவர்கள் தயாரித்த மருந்துகள் மீது தமக்கு நம்பிக்கை இல்லை எனவும் அந்த நாட்டு உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

நாளொன்றுக்கு 4 ஆயிரம் பேர் உயிரிழக்கும் அமெரிக்காவில் தடுப்பூசி பயன்படுத்தாமல் ஃபைஸர் பயோஎன்டெக் நிறுவனம் மற்ற நாடுகளுக்கு ஏன் அதனை விநியோகிக்க வேண்டும் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதேவேளை, கிரீஸ் நாட்டில் அமுல்ப்படுத்தப்பட்டுள்ள கொரோனா ஊரடங்கு சட்டம் இந்த மாதம் 18ம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த நவம்பர் மாதம் முதல் கிரீஸில் ஊரடங்கு அமுல்ப்படுத்தப்பட்டுள்ளது.

அந்த ஊரடங்கை இந்த மாதம் 18ம் திகதி வரை அந்நாட்டு அரசாங்கம் நீடித்துள்ளதோடு உயர்தர பாடசாலைகள் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும் எனவும் தெரிவித்துள்ளது.