இந்தோனேசியாவில் இருந்து பயணித்த நிலையில் காணாமல் போனதாக கூறப்படும் விமானம் கடலில் வீழ்ந்த இடம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அந்நாட்டு கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
62 பயணிகளுடன் பயணத்தை ஆரம்பித்து 4 நிமிடங்களில் தொடர்பை இழந்த குறித்த விமானம் நேற்று காணாமல் போயிருந்தது.
இந்தோனேசியாவின் ஸ்ரீவிஜயா (Sriwijaya) ஏயார் போயிங் ரக விமானம் ஒன்றே இவ்வாறு காணாமல் போனது.
இந்தநிலையில் குறித்த பகுதிக்கு கடற்படையின் 10 கப்பல்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
அத்துடன் காணாமல் போனவர்களை மீட்கும் பணிகள் தொடர்வதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.