ட்ரம்பிற்கு எதிரான குற்றச்சாட்டு மனுவை சமர்ப்பிக்க அமெரிக்க ஜனநாயகக் கட்சி தயார்...!

Monday, 11 January 2021 - 12:18

%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88+%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF+%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D...%21
அமெரிக்க நாடாளுமன்றத்திற்கு நுழைந்து ஜோ பைடனின் ஜனாதிபதி பதவியை உறுதிபடுத்தும் செயன்முறையை தடுப்பதற்கு ஆதரவாளர்களை திரட்டிய காரணத்திற்காக ஜனாதிபதி ட்ரம்பிற்கு எதிராக குற்றச்சாட்டு மனுவை தாக்கல் செய்வதற்கு அமெரிக்க ஜனநாயகக் கட்சி தயாராகி வருகிறது.

இந்த குற்றச்சாட்டு மனு அமெரிக்க காங்கிரஸிற்கு வழங்கப்படவுள்ளதுடன், இது தொர்பான வாக்களிப்பு நாளை நடத்தப்படலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும் இந்த மனுவை செனட் சபையின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்காதிருக்க அமெரிக்க ஜனநாயகக் கட்சி முடிவு செய்துள்ளது.

ஜோ பைடன் ஜனாதிபதியாக பொறுப்பேற்று நூறு நாட்களுக்கு பின்னரே ட்ரம்பிற்கு எதிரான இந்த குற்றச்சாட்டு மனுவை செனட் சபையில் சமர்ப்பிக்க எதிர்ப்பார்க்கப்படுவதாக அமெரிக்க ஜனநாயகக் கட்சி தெரிவித்துள்ளது.