விபத்துக்குள்ளான இந்தோனேசிய பயணிகள் விமானத்தின் கறுப்புப்பெட்டியை மீட்கும் பணிகள் ஆரம்பம்!

Monday, 11 January 2021 - 16:50

%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D%21
விபத்துக்குள்ளான இந்தோனேசிய பயணிகள் விமானத்தின் தகவல் பதிவு பெட்டியான கறுப்புப்பெட்டியை மீட்பதற்கான பணிகள் இன்று காலை மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

62 பயணிகளுடன் பயணித்த போஹிங் 737 ரக விமானம் நேற்று முன்தினம் காணாமல்போனது.

இதனை அடுத்து விமானத்தின் சில பாகங்களும், மனித உடல் பாகங்கள் சிலவும் நேற்று கண்டுபிடிக்கப்பட்டன.

கண்டுபிடிக்கப்பட்ட விமானத்தின் பாகங்களை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், கடலில் வீழ்ந்து விபத்துக்குள்ளான விமானம், பாகங்களாக பிளவடைந்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகமொன்று தெரிவித்துள்ளது.