மேலும் சில நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான PCR பெறுபேறுகள் வெளியாகின..!

Friday, 15 January 2021 - 11:10

%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1+%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9+PCR+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9..%21
சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன உட்பட 15 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு, நேற்று முன்தினம் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளில், கொவிட்-19 தொற்று இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற தகவல்கள் எமது செய்திச் சேவையிடம் இதனை உறுதிப்படுத்தியுள்ளன.

குறிப்பிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற பணிக்குழாமினர் உட்பட 463 பேருக்கு நேற்று முன்தினம் நாடாளுமன்ற வளாகத்தில் வைத்து பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

இந்த நிலையில், பணிக்குழாமினர் மற்றும் காவல்துறையினர் உள்ளிட்ட 448 பேரின் பி.சி.ஆர் பரிசோதனை முடிவுகள் இன்றைய தினம் கிடைக்கப்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேநேரம், இன்றைய தினமும் நாடாளுமன்ற வளாகத்தில் பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.